இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அறிந்த கதை

                                            சித்திரை மாதம் நடுநிசியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எழிலன், அக்கம் பக்கத்தினரின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். அவனைப் போலவே திடுக்கிட்டு எழுந்த அவள் தாய் வள்ளியும் கலவரத்தோடு மகனைப் பார்க்க அலறல் சத்தத்தின் வீரியம் அதிகமானது எழிலனின் செவிகளில்.  சற்றுப் பதட்டத்தோடு கதவை திறந்தவன் கண்ணெதிரே எதிர் வீட்டு மாடசாமியின் குடிசையை ஏணியாக்கி விண்ணை முட்ட முயற்சி செய்யும் நெருப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். மாடசாமி வீடு மட்டுமல்லாது, அடுத்தடுத்து இருந்த அத்தனை குடிசை வீடுகளும் நெருப்பின் பசியாற்றிக் கொண்டிருந்தன. ஊர்கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து தீயை அணைக்க ஆண்களும் சில பெண்களும் ஈடுபட்டிருக்க, இன்னும் சில பெண்கள் மண்ணை வாரி கூரையில் வீசி தீயை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்க இன்னும் சிலரோ, தங்கள் குழந்தைகளையும், தங்களின் சேமிப்பையும் நெருப்பிடம் இருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சிமெண்...

பொறுமை

ஞாயிற்றுக்கிழமை மாலை காலாற கடற்கரையில் நடைபோட்டு, அலையின் ஓசையிலும் காற்றின் சீற்றத்திலும் தன்னை சிறிது நேரம் தொலைத்துவிட்டு, கடற்கரை மணலில் முளைத்திருக்கும் கடைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே தன் இருசக்கர வாகனம் அருகே வந்தான் கதிர். வண்டியை கிளப்பி சாலையை நிரம்பிய மக்கள் கூட்டத்தை கவனத்தில் கொண்டு மெதுவாக வண்டியை செலுத்தி பிரதான சாலைக்கு வந்தான். அப்போதுதான் கண்ணிமைக்கும் நேரத்தில் சட்டென பறந்து சென்றன அந்த இரு சக்கர வாகனங்கள். அத்தனை போக்குவரத்து நெரிசலிலும் தனக்கென வண்டிகளின் ஊடே நுழைந்து மின்னலாய் பறந்தனர்.  சற்றே அதிர்ந்த கதிர் “கொஞ்சம் கூட பொறுமை இல்லாம எங்க போயி விழுந்து நொறுங்க இவ்வளவு வேகமா போறானுங்களோ” என மனதில் திட்டிக்கொண்டே பிரதான சாலையில் கலந்து தன் வீட்டை நோக்கி சென்றான்.                                        வீட்டுக்கு செல்லும் வழியில், ஒரு போக்குவரத்து நெரிசலில் நிற்கையில் அவன் கண்ணில் பட்டது அந்த விளம்பரம். “Order செய்த அரைமணி நேரத்தில் பீஸ்ஸா விநியோகிக்கப்பட...

மணியோசை

ஏதோ ஒரு ஆழ்ந்த யோசனையில் இருந்த செல்வன் “தமிழாசிரியர் வந்துட்டாருடா எழுந்திரு” என்ற திலகனின் குரல் கேட்டு அனிச்சையாய் எழுந்து வழக்கமான வணக்கத்தை செலுத்திவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான். அந்தப் பாடவேளை முடியும் வரை அவனது கவனம் சிதறியவாறே ஏதோ யோசனையில் இருந்தான். அதைத் திலகனும் கவனிக்கத் தவறவில்லை. அந்தப் பாடவேளை முடிந்து உணவு இடைவேளைக்காக அனைவரும் சென்ற பிறகும் அதே சிந்தனையில் இருந்தான் செல்வன்.  திலகனும் “ஏன்டா என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்று செல்வனின் தோள்மேல் கைபோட்டு அக்கறையுடன் கேட்டான். “இன்னைக்கு மாறன் வாத்தியார் இயற்பியல் பாடம் நடத்தும்போது ஒன்று சொன்னாரே டா கவனிச்சியா?” என்று சோகம் கலந்த ஆவலில் கேட்டான் செல்வன். “ஆமாண்டா நான் கூட செய்தியில் பார்த்தேன், ஒரே ஏவுகணையில் 100 செயற்கைக்கோள் அனுப்பிருக்காங்களாம் நம் நாட்டில் இருந்து” என்று வியப்போடு பதிலளித்தான் திலகன். “கொஞ்ச நாளைக்கு முன்னாடி, செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பினாங்கன்னு செய்தியில் பார்த்தேன் டா” என்று அப்பாவியாய் சொன்னான் செல்வன். “சரிடா அதுக்கு நீ ஏன் ஒரேமாதிரியா இருக்க?”என்று சற்று குரலை உயர்த...

தங்கத்தகரம்

“                                        என்னடி செல்வி நாழியோட வரப்பிடாதா? நேத்து ஒருநாள் நீ வரலன்னதும் எல்லாம் போட்டது போட்டபடியே இருக்கு.  பின்னாடி துணி போட்ருக்கேன். போய் வேலையைப் பாரு. ஐயா கிளம்பிண்டு இருக்கார்.” என்று சொல்லியவாறே வீட்டுக்குள் ஓடினாள் கமலம் மாமி. புடவை முந்தானையை இடுப்பில் சொருகியபடியே வீட்டின் பின்பக்கம் நோக்கி சென்றாள் செல்வி. அங்கே பின்வாசல் அருகே இருந்த திண்ணையில் அழுக்குத் துணிகள் கிடந்தன. அவற்றை எடுத்து அலுமினிய வாளியில் முக்கி, சலவைத்தூளையும் வேண்டிய அளவுக்கு கலந்து, நுரை பொங்க நின்ற வாளியில் எல்லாத் துணிகளும் நனைந்து விட்டனவா என்பதை உறுதி செய்து கொண்டபின், தண்ணீர் குழாயை அண்டிச் சென்றாள், அங்கிருந்த பாத்திரங்களை கழுவுவதற்கு.                       செல்வி, பாத்திரங்களை கழுவி முடிப்பதற்கும், கமலம் மாமி அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது. “என்னடி துணியை இன்னும் துவைக்கலயா?” என்று சற்று அதட்டல...

தங்கத்தாலி

  அங்கம்மாள் வீட்டு வாசலில் வழக்கம்போல் இந்த மாதமும் அவளிடம் சீட்டு போட்டிருந்த பெண்கள் ஏலம் கேட்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர். குறைவான தள்ளு போனால் சீட்டு எடுத்துவிடலாம் என்ற ஆவலோடு மீனாட்சியும் காத்திருந்தாள். ஏலம் தொடங்கியது, 15000 ரூபாய்க்கான சீட்டை 1000 ரூபாய் பீட் என ஆரம்பித்தாள் அங்கம்மாள். மீனாட்சி ஏலம் கேட்குமுன்பே பக்கத்து வீட்டு பார்வதி 2000 ரூபாய் என ஆரம்பிக்க, பூக்காரி கண்ணம்மா 2500 ஏற்றிவிட, ஆளுக்கொரு ஏலம் கேட்க இறுதியாய், தங்கத்தாலி வாங்க வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்ட மீனாட்சி 5200 என ஏலம் கேட்க, அதற்குமேல் பணத்தை விட்டுக் கொடுக்க யாருக்கும் மனமில்லாததால், 5200 என மூன்று முறை கூவிவிட்டு ஏலத்தை முடித்தாள் அங்கம்மாள். இந்த சீட்டுப் பணத்தைக்கொண்டு வரும் தீபாவளிக்கு முன் தங்கத்தில் தாலிக்கொடி வாங்கி அணியலாம் என்று ஆவல் மேலோங்க தன்வீடு  திரும்பினாள் மீனாட்சி. வீட்டில் வழக்கம்போல் அவளது கணவன், டாஸ்மாக் நண்பனை அணைத்தபடி சொர்க்கத்தில் மிதந்து கொண்டிருந்தான். அவனது தலையருகில், அரசாங்கம் இலவசமாய்க் கொடுத்த மின்விசிறி, தன் எசமானுக்கு சேவை செய்துகொண்டிருந்தது. ...

கலியுகக் கண்ணகி

                திருவான்மியூர் அடுத்துள்ள நீலாங்கரையில் அமைந்துள்ள ‘நல்ல உள்ளங்கள்’ அறக்கட்டளை இல்லம் ஆதரவற்ற  30 குழந்தைகளுக்கு அன்னை இல்லமாக விளங்குகிறது. அதில் 13 வயதாகு ம் மலர்கொடியும் ஒருவள். பிறந்தவுடனே தன் தாயை இழந்த மலர்கொடி, தன் ஏழாம் வயதில் ஒரு விபத்தில் தன் தந்தையையும் பறிகொடுக்க, சில நல்ல மனிதர்களின் தயவால் இந்த இல்லத்திற்கு வந்த அவளுக்கு அன்று  முதல் இதுவே தாய்வீடானது . இந்தத் தாய் வீட்டிலும் அவள்  பல இன்னல்களைசந்தித்திருந்தாள்.  அவள் துன்பம் போக்கி தற்போது அ வளுக்கு ஆதரவாய் இருப்பது நல்ல உள்ளங்கள் அறக்கட்டளையின் தலைவராயிருந்த குணசுந்தரின் மனைவி மீனாட்சி. இப்போது மலர்கொடிக்கு தாயாகவே மாறியிருந்தாள் மீனாட்சி.  மலர்கொடிக்கு கணக்கு சொல்லி கொடுத்து கொண்டிருந்த மீனாட்சி அங்கு வேலை செய்யும் அன்னம்மாளின் குரல் கேட்டு திரும்பினாள்  "அம்மா உங்களைப் பார்க்க வக்கீல் ஐயா வந்திருக்கா...