இடுகைகள்

நந்தினி

“தட தட” வென தொடர்வண்டி சத்தம் அப்போதுதான் நந்தினியின் செவிகளைத் தாண்டி மூளைக்கு எட்டியது. உறக்கம் கலைந்தவள் சூரிய வெளிச்சம் எட்டிப்பார்ப்பதை உணர்ந்து அலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தால், மணி 7.05 என்று காட்டியது. தன் மேலே இருந்த போர்வையை விலக்கிவிட்டு சோம்பல் முறிக்க முயற்சித்தவளுக்கு தடையாய் தொடர்வண்டியின் மேற்கூரை தட்டியது. சற்று கீழே எட்டிப்பார்த்தாள். அவள் தந்தை மாடசாமி அன்னை முத்தம்மாளுடன் சன்னோரத்தில் நகரும் வயல்வெளியைக் காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார். தூரத்தில் எங்கோ “பருத்திப்பால் பருத்திப்பால்.... சூடான பருத்திப்பால்” என்ற சத்தம் கேட்டது. அந்தக் குரல் தன்னுடைய படுக்கைக்கு அருகே வருவதை உணர்ந்த நந்தினி “அப்பா இன்னும் எவ்ளோ நேரம் இருக்குப்பா திருநெல்வேலி போய்ச் சேர?”என்று ஆவலோடு கேட்டாள்.  “இன்னும் அரைமணி நேரத்தில் போய்டலாம்மா. நீ தேநீர் எதுவும் குடிக்கிறாயா?” என்று மாடசாமி கேட்க உடனே “பருத்திப்பால் சாப்டுறேன்பா” என்று புன்னகையோடு பதிலளித்தாள். மாடசாமியும் சிரித்துக் கொண்டே “சரி கீழ இறங்கி வா” என்றார்.                   ...

காதல்

                 பழைய மகாபலிபுர சாலையில் காலைப் போக்குவரத்து நெரிசல்களுக்கிடையே ஊர்ந்தும், தவழ்ந்தும் வந்து கொண்டிருந்த அந்த தனியார் பேருந்து சோழிங்கநல்லூர் அருகேயுள்ள பிரபலமான தொழில்நுட்ப  பூங்காவில் நின்றது. ஆங்காங்கே நின்று கொண்டிருந்த அலங்கார நிழற்குடைகள் எல்லாம் அதுவரை வெறிச்சோடிக் கிடந்தன. பேருந்து வந்து நின்ற அடுத்த நொடியில் காலை சூரியனைக் காணும் ஆவலோடு புறாக்கள் கூட்டம் ஒன்று அந்த வெற்றிடங்களை நிரப்பி நின்றன. அழகுக்காக வைக்கப்பட்ட அலங்காரச் செடிகளை தழுவிக் கொண்டிருந்த தென்றலும், பேருந்து நின்ற திசையில் தன் கவனத்தை செலுத்தியது. அவற்றோடு சேர்த்து அங்கே பணிபுரியும் சில ஊழியர்களும் ஆவலோடு பேருந்தை நோக்க, அதே தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியர்கள் ஒவ்வொருவராய் இறங்க ஆரம்பித்தனர். அதில்தான் இறங்கினாள், அத்தனை பேரின் ஆவலுக்கும் சொந்தக்காரியான மதிவதனி.  கருத்த தேகம், களையான முகம், அடுக்கி வச்ச பல்வரிசை, இதழ்களின் புன்னகை கண்டு வெட்கப்படும் கன்னக்குழி, கழுத்தோடு பிணைந்து தன் அழகை கூட்டிக் கொண்ட மெல்...

அறிந்த கதை

                                            சித்திரை மாதம் நடுநிசியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எழிலன், அக்கம் பக்கத்தினரின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். அவனைப் போலவே திடுக்கிட்டு எழுந்த அவள் தாய் வள்ளியும் கலவரத்தோடு மகனைப் பார்க்க அலறல் சத்தத்தின் வீரியம் அதிகமானது எழிலனின் செவிகளில்.  சற்றுப் பதட்டத்தோடு கதவை திறந்தவன் கண்ணெதிரே எதிர் வீட்டு மாடசாமியின் குடிசையை ஏணியாக்கி விண்ணை முட்ட முயற்சி செய்யும் நெருப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். மாடசாமி வீடு மட்டுமல்லாது, அடுத்தடுத்து இருந்த அத்தனை குடிசை வீடுகளும் நெருப்பின் பசியாற்றிக் கொண்டிருந்தன. ஊர்கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து தீயை அணைக்க ஆண்களும் சில பெண்களும் ஈடுபட்டிருக்க, இன்னும் சில பெண்கள் மண்ணை வாரி கூரையில் வீசி தீயை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்க இன்னும் சிலரோ, தங்கள் குழந்தைகளையும், தங்களின் சேமிப்பையும் நெருப்பிடம் இருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சிமெண்...

பொறுமை

ஞாயிற்றுக்கிழமை மாலை காலாற கடற்கரையில் நடைபோட்டு, அலையின் ஓசையிலும் காற்றின் சீற்றத்திலும் தன்னை சிறிது நேரம் தொலைத்துவிட்டு, கடற்கரை மணலில் முளைத்திருக்கும் கடைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே தன் இருசக்கர வாகனம் அருகே வந்தான் கதிர். வண்டியை கிளப்பி சாலையை நிரம்பிய மக்கள் கூட்டத்தை கவனத்தில் கொண்டு மெதுவாக வண்டியை செலுத்தி பிரதான சாலைக்கு வந்தான். அப்போதுதான் கண்ணிமைக்கும் நேரத்தில் சட்டென பறந்து சென்றன அந்த இரு சக்கர வாகனங்கள். அத்தனை போக்குவரத்து நெரிசலிலும் தனக்கென வண்டிகளின் ஊடே நுழைந்து மின்னலாய் பறந்தனர்.  சற்றே அதிர்ந்த கதிர் “கொஞ்சம் கூட பொறுமை இல்லாம எங்க போயி விழுந்து நொறுங்க இவ்வளவு வேகமா போறானுங்களோ” என மனதில் திட்டிக்கொண்டே பிரதான சாலையில் கலந்து தன் வீட்டை நோக்கி சென்றான்.                                        வீட்டுக்கு செல்லும் வழியில், ஒரு போக்குவரத்து நெரிசலில் நிற்கையில் அவன் கண்ணில் பட்டது அந்த விளம்பரம். “Order செய்த அரைமணி நேரத்தில் பீஸ்ஸா விநியோகிக்கப்பட...

மணியோசை

ஏதோ ஒரு ஆழ்ந்த யோசனையில் இருந்த செல்வன் “தமிழாசிரியர் வந்துட்டாருடா எழுந்திரு” என்ற திலகனின் குரல் கேட்டு அனிச்சையாய் எழுந்து வழக்கமான வணக்கத்தை செலுத்திவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான். அந்தப் பாடவேளை முடியும் வரை அவனது கவனம் சிதறியவாறே ஏதோ யோசனையில் இருந்தான். அதைத் திலகனும் கவனிக்கத் தவறவில்லை. அந்தப் பாடவேளை முடிந்து உணவு இடைவேளைக்காக அனைவரும் சென்ற பிறகும் அதே சிந்தனையில் இருந்தான் செல்வன்.  திலகனும் “ஏன்டா என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்று செல்வனின் தோள்மேல் கைபோட்டு அக்கறையுடன் கேட்டான். “இன்னைக்கு மாறன் வாத்தியார் இயற்பியல் பாடம் நடத்தும்போது ஒன்று சொன்னாரே டா கவனிச்சியா?” என்று சோகம் கலந்த ஆவலில் கேட்டான் செல்வன். “ஆமாண்டா நான் கூட செய்தியில் பார்த்தேன், ஒரே ஏவுகணையில் 100 செயற்கைக்கோள் அனுப்பிருக்காங்களாம் நம் நாட்டில் இருந்து” என்று வியப்போடு பதிலளித்தான் திலகன். “கொஞ்ச நாளைக்கு முன்னாடி, செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பினாங்கன்னு செய்தியில் பார்த்தேன் டா” என்று அப்பாவியாய் சொன்னான் செல்வன். “சரிடா அதுக்கு நீ ஏன் ஒரேமாதிரியா இருக்க?”என்று சற்று குரலை உயர்த...

தங்கத்தகரம்

“                                        என்னடி செல்வி நாழியோட வரப்பிடாதா? நேத்து ஒருநாள் நீ வரலன்னதும் எல்லாம் போட்டது போட்டபடியே இருக்கு.  பின்னாடி துணி போட்ருக்கேன். போய் வேலையைப் பாரு. ஐயா கிளம்பிண்டு இருக்கார்.” என்று சொல்லியவாறே வீட்டுக்குள் ஓடினாள் கமலம் மாமி. புடவை முந்தானையை இடுப்பில் சொருகியபடியே வீட்டின் பின்பக்கம் நோக்கி சென்றாள் செல்வி. அங்கே பின்வாசல் அருகே இருந்த திண்ணையில் அழுக்குத் துணிகள் கிடந்தன. அவற்றை எடுத்து அலுமினிய வாளியில் முக்கி, சலவைத்தூளையும் வேண்டிய அளவுக்கு கலந்து, நுரை பொங்க நின்ற வாளியில் எல்லாத் துணிகளும் நனைந்து விட்டனவா என்பதை உறுதி செய்து கொண்டபின், தண்ணீர் குழாயை அண்டிச் சென்றாள், அங்கிருந்த பாத்திரங்களை கழுவுவதற்கு.                       செல்வி, பாத்திரங்களை கழுவி முடிப்பதற்கும், கமலம் மாமி அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது. “என்னடி துணியை இன்னும் துவைக்கலயா?” என்று சற்று அதட்டல...

தங்கத்தாலி

  அங்கம்மாள் வீட்டு வாசலில் வழக்கம்போல் இந்த மாதமும் அவளிடம் சீட்டு போட்டிருந்த பெண்கள் ஏலம் கேட்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர். குறைவான தள்ளு போனால் சீட்டு எடுத்துவிடலாம் என்ற ஆவலோடு மீனாட்சியும் காத்திருந்தாள். ஏலம் தொடங்கியது, 15000 ரூபாய்க்கான சீட்டை 1000 ரூபாய் பீட் என ஆரம்பித்தாள் அங்கம்மாள். மீனாட்சி ஏலம் கேட்குமுன்பே பக்கத்து வீட்டு பார்வதி 2000 ரூபாய் என ஆரம்பிக்க, பூக்காரி கண்ணம்மா 2500 ஏற்றிவிட, ஆளுக்கொரு ஏலம் கேட்க இறுதியாய், தங்கத்தாலி வாங்க வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்ட மீனாட்சி 5200 என ஏலம் கேட்க, அதற்குமேல் பணத்தை விட்டுக் கொடுக்க யாருக்கும் மனமில்லாததால், 5200 என மூன்று முறை கூவிவிட்டு ஏலத்தை முடித்தாள் அங்கம்மாள். இந்த சீட்டுப் பணத்தைக்கொண்டு வரும் தீபாவளிக்கு முன் தங்கத்தில் தாலிக்கொடி வாங்கி அணியலாம் என்று ஆவல் மேலோங்க தன்வீடு  திரும்பினாள் மீனாட்சி. வீட்டில் வழக்கம்போல் அவளது கணவன், டாஸ்மாக் நண்பனை அணைத்தபடி சொர்க்கத்தில் மிதந்து கொண்டிருந்தான். அவனது தலையருகில், அரசாங்கம் இலவசமாய்க் கொடுத்த மின்விசிறி, தன் எசமானுக்கு சேவை செய்துகொண்டிருந்தது. ...